கன்னியாகுமரி மாவட்ட முழுவதும் டாஸ்மாக கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்- காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் – ஊழியர்கள் போராட்டத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று அடைப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடை ஊழியர்கள் இன்று காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்
டாஸ்மார்க் கடைகளில் ஏற்படும் அடிப்படை செலவினங்களை மாவட்ட நிர்வாகமே ஏற்க வேண்டும், மின் கட்டணங்கள் முழுவதும் அரசை நேரடியாக கட்ட வேண்டும் சரக்கு இறக்கு கூலி நிர்வாகம் ஏற்க வேண்டும், காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்தில் ஏற்படும் கட்டிட வாடகை செலவினங்களை நிர்வாகமே ஏற்க வேண்டும், மதுபான பாட்டில் உடைவு இழப்பீடு தர வேண்டும், காலி அட்டைப்பெட்டி சேதாரக் கழிவு தரவேண்டும், விற்பனைத் தொகை வங்கியில் செலுத்தி செல்லானை மாவட்ட நிர்வாகத்திற்கு தினசரி கொண்டு வருவதற்கு உண்டான செலவினங்களை மற்றும் நிர்வாகம் அலைக்கும் கூட்டத்திற்கு கலந்து கள்ள போக்குவரத்து செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்க வேண்டும் போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு அனைத்து டாஸ்மாக் ஊழியர்களும் காலி பாட்டில் சேகரிக்கும் திட்டத்திற்கான ஸ்டிக்கர்கள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்காக டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தையில் பலனளிக்காததால் தொடர்ந்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடையிலும் இன்று மூடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 78 டாஸ்மாக் கடைகள் உள்ள நிலையில் அனைத்து கடையிலும் இன்று மூடப்பட்ட பட்டதைத் தொடர்ந்து மது பிரியர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.














