ஜோலார்பேட்டை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதி இரண்டில் வசிப்பவர் ஏகாம்பரம் இவரது மகள் கீர்த்திகா இவருக்கும்
ஜோலார்பேட்டை அடுத்த சின்ன வெங்காய பள்ளி வேடியப்பன் வட்டம் பகுதியில் வசிக்கும் சென்ராயன் மகன் அமித் குமார் என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இரு வீட்டார் சமூகத்துடன் திருமணம் நடைபெற்று ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவர் அமித் குமார் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்த மனைவி கீர்த்திகா அடிக்கடி சண்டை இட்டு வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர் வீட்டார் பஞ்சாயத்து செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கணவர் வீட்டுக்குச் சென்ற மனைவி கீர்த்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டு தரப்பில் இருந்து கீர்த்திகாவின் உடலை திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த கீர்த்திகாவின் உறவினர்கள் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் குவிந்து கீர்த்திகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் அறிந்து திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் இரு தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணைக்கு பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்திரவாதம் கொடுத்ததின் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.














