திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் பச்சிளம் குழந்தைகள் சுகாதாரமான காற்றோட்டம் இல்லாமல் ஆவதி
தமிழகம் முழுவதும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இன்று தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரையில் இருந்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிகழ்ச்சியை துவக்கி வைத்ததை தொடர்ந்து…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதியில் இருந்து இன்றுவரை திருப்பத்தூர் சுற்றுவட்டாரங்களில் பிறந்த 1458 குழந்தைகளுக்கும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1016 குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 34 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் துவக்கி வைத்தார்.
அப்போது அரசு மருத்துவமனை சார்ந்த நிர்வாகிகள் முறையான ஏற்பாடுகளை செய்யாத காரணத்தினால் பச்சிளம் குழந்தைகளும் தாய்மார்களும் சுகாதாரமான காற்று வசதி இல்லாமல் அவதி உற்றனர். அது மட்டுமின்றி அவர்களுக்கு அமர போதுமான இட வசதி ஏற்பாடுகளும் சரியாக காரணத்தினால் தரையில் அமர்ந்து நீண்ட நேரமாக பரிதவித்தனர்.














