உலக இருதய தினத்தை முன்னிட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதயத்தை காப்போம் என வலியுறுத்தி நடைபெற்ற மருத்துவ மாணவர்களின் பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..
சர்வதேச இருதய தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவில் துவங்கிய கல்லூரி மாணவர்கள் பேரணியானது, உள் நோயாளிகள் பிரிவு, மருத்துவ கல்லூரி வளாகம், கல்லூரி கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பேரணியாக சென்று மீண்டும் புற நோயாளிகள் பிரிவு முன்பு சென்று பேரணி நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் அசோகன் மற்றும் இதயவியல் மருத்துவர் சக்கரவர்த்தி தெரிவித்த போது…
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் சிகிச்சை செய்து வருகிறோம். மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு சில நடைமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். உணவில் கொழுப்பின் அளவை குறைக்க வேண்டும், உப்பின் அளவை குறைக்க வேண்டும், மதுப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும், புகைப்பழக்கத்தை அறவே தடுக்க வேண்டும்.
ஆஞ்சியோகிராம் சிகிச்சை என்பது இரண்டாம் கட்ட சிகிச்சை அந்த இரண்டாம் சிகிச்சை வருவதற்கு முன்னால் இந்த வாழ்க்கை நடைமுறைகளை சரியாக பின்பற்றினால் நமது வாழ்க்கையில் இதய நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
சமீப காலத்தில் அதிகமாக இளைஞர்கள் மாரடைப்பால் பாதிக்கப்படுகிறார்கள் அதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்ட பொழுது…
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1800 இருதய நோயாளிகளில் 20 சதவீதத்திலிருந்து 30 சதவீத நோயாளிகள் 30 முதல் 35 வயது உடையவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை செய்து கொண்டிருக்கிறோம்.
இதற்கு ஒரே பொதுவான காரணிகள் என்னவென்று பார்த்தால் சரியான தூக்கம் இன்மை, துரித உணவு என்று சொல்லக்கூடிய கொழுப்பு நிறைந்த உணவுகள், அதிக வேலைப்பாடுகள் உடற்பயிற்சி இல்லாமை இதுதான் முக்கிய காரணமாக அமைகிறது.
25 முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகமாக இருதய மாரடைப்பு அதிகமாக வருகிறது முறையான நடைப்பயிற்சி உணவு தட்டுப்பாடு , புகைப்பழக்கத்தை நிறுத்துதல் 8 மணி நேர தூக்கம் இதையெல்லாம் பின்பற்றினால் மாரடைப்பை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் மாரடைப்பு ஏற்பட்டால் நமது திருவாரூர் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.













