மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்த கேபிள் உரிமையாளரின் சிசிடிவி காட்சி வெளியாகி திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் .கேபிள் உரிமையாளர் ஆவார்.
இந்த நிலையில் நேற்று உடல் நிலை குறைவு காரணமாக திருவாரூர் பனகல் சாலையில் உள்ள தனியார் மெடிக்கலில் மருந்து வாங்க சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக மருந்து கடை உரிமையாளர் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொண்டிருக்கும் போது கேபிள் உரிமையாளர் மயங்கிய விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














