மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினர் :-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதியாக தாய் மாமன் தங்க மோதிரம் வழக்கம் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை மதுரையில் இன்றைய முதலமைச்சர் ஜோசப் விஜய் துவக்கி வைத்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், அரசு மருத்துவமனையில் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜமால் யூனுஸ் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் இன்று மாவட்ட ஆட்சியர் கலைஞர்கள் தெரிவித்தார்.















