தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி மயிலாடுதுறையில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் உள்ள ஆர்ப்பாட்டம், ராமஜென்ம பூமி அறக்கட்டளை உருவானதில் முக்கிய பங்காற்றிய ஞானேஷ்குமார், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, மிகவும் நெருக்கமானவர், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேட்டி :-
தேர்தல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகளில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாருக்கு, மற்ற இரண்டு தேர்தல் அதிகாரிகள் 14 முறை ஆட்சேபனை கடிதங்கள் எழுதியதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சீர்திருத்தம் மூலமாக பல கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டு பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமைத்ததாக குற்றம் சாட்டிய நிலையில், இதனைக் கண்டித்தும் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட தலைவர் பானுசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே எஸ் அழகிரி, காஷ்மீர் சிறப்பு சீர்திருத்த சட்டம் மற்றும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை ஆகிய பிரச்சினைகளில் ஞானேஷ்குமார் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த காரணத்தால் அவருக்கு தலைமை தேர்தல் ஆணையர் பதவி அளிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாகவே இந்த முறை கேடு
நடை பெற்றுள்ளது, ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
பைட்: –
கே எஸ் அழகிரி முன்னாள் மாநிலத் தலைவர் காங்கிரஸ்















