இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும், அவர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் கூறி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எஸ்ஐஆரில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவள்ளுர் ரயில் நிலையம் அருகே மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
அப்போது ஞானேஷ் குமாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும்,
உடனடியாக ஞானேஷ் குமார் கைது செய்ய வேண்டும் எனவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்து கொண்டனர்.
பேட்டி: காங்கை குமார் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர்















