தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். தனது திரைப்படங்கள் மூலம் திரை உலகில் முத்திரை பதித்த இவர், மகனான விஜயை நாயகனாக அறிமுகம் செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடக்கத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும், கடின உழைப்பின் மூலம் தற்போது ‘பாக்ஸ் ஆபிஸ் கிங்’ என அழைக்கப்படுகிறார் தளபதி விஜய். தனது 69வது படத்துடன் நடிகராக இருந்து விலகி, தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அவர், மகனின் பயணத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்.
இப்போது, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தாத்தா எஸ்.ஏ. சந்திரசேகர் போலவே இயக்குநராக தனது திரை பயணத்தை தொடங்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இன்று சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழுவினர் ஒரு ஸ்பெஷல் வீடியோவைக் வெளியிட்டுள்ளனர். இதில், சஞ்சயின் இயக்கத் திறமைக்கும், படத்தின் மாஸ் ஃபீல்லுக்கும் ரசிகர்கள் Social media-வில் சூப்பர் ரெஸ்பான்ஸ் கொடுத்துவருகின்றனர்.

ஜேசன் சஞ்சயின் முதல் படமே இப்படி பிரம்மாண்டமாக உருவாகும் நிலையில், தமிழ் சினிமாவில் புதிய இயக்குநர் ஒருவரின் பசுமை பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.