August 1, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

பைரவர் உபாசனை

by Satheesa
October 3, 2025
in Bakthi
A A
0
பைரவர் உபாசனை
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

கோவில்களில் சன்னிதி பூட்டியதும், பைரவர் சன்னிதியில் சாவியை வைத்து விட்டு சென்று விடுவர். அதைத் தொட்டவர்களின் வாழ்வு முடிந்து போகும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தவராக பைரவர் கருதப்பட்டார்.

இவரை வழிபடுவதற்கு உகந்த திதி தேய்பிறை அஷ்டமி. அதிலும் கார்த்திகை அஷ்டமி மிகவும் சக்தி வாய்ந்தது. தாருகாசுரன் என்பவன், சாகா வரம் வேண்டும் என, சிவனிடம் கேட்டான். உயிருக்கு இறப்புண்டு என்ற சிவன், ஏதோ ஒரு பொருளால் இறப்பை வேண்டும்படி அவனிடம் கூறினார்.

அவன் அகங்காரத்துடன், ஒரு பெண்ணைத் தவிர, தன்னை யாரும் அழிக்கக் கூடாது என்று வரம் பெற்றான். பலம் மிக்க தன்னை, ஒரு பெண் என்ன செய்துவிட முடியும் என்பது அவனது எண்ணம்.

பல அட்டூழியங்கள் செய்த அவனுக்கு அழியும் காலம் வந்தது. தேவர்கள் சிவ, பார்வதியிடம் முறையிட்டனர். பார்வதி தேவி, சிவன் விழுங்கிய ஆலகால வி~த்தில் இருந்து, கறை படிந்த ஒரு சுடரை உருவாக்கினாள். அந்தச் சுடர், ஒரு பெண்ணாக வடிவெடுத்தது.

“காளம் படிந்த அந்த பெண்ணுக்கு, “காளி என பெயர் சூட்டினாள். காளிதேவி கடும் கோபத்துடன் தாருகாசுரன் இருக்கும் திசைநோக்கி திரும்பினாள். அந்த கோபம், கனலாக வடிவெடுத்து, சூரனை சுட்டெரித்தது. பின், அந்த கனலை ஒரு குழந்தையாக மாற்றிய காளி, அதற்கு பாலூட்டினாள். அதன்பின், சிவபெருமான், காளியையும், அந்தக் குழந்தையையும் தன் உடலுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார்.

அப்போது அவரது உடலில் இருந்து காளியால் உருவாக்கப்பட்டது போல, எட்டு குழந்தைகள் உருவாயின. அந்த எட்டையும் ஒன்றாக்கிய சிவன், அந்த குழந்தைக்கு, “பைரவர்| என்று பெயர் வைத்தார். காளி, சிவன் ஐக்கியத்துடன், எட்டு மடங்கு சக்தியுடன், காளத்தை தன் உடலில் அடக்கிய அந்தக் குழந்தை, “காளபைரவர்| எனப்பட்டு தற்போது, “காலபைரவர்| ஆகியுள்ளது. இவரை தம் காவலுக்கு சிவபார்வதி நியமித்தனர்.

தெய்வங்களுக்கு காளை, சிங்கம், யானை, மயில் போன்ற வாகனங்கள் இருக்க, பைரவருக்கு மட்டும் நாய் வாகனம் தரப்பட்டுள்ளது. சிலர் நாயை பஞ்சுமெத்தையில் படுக்க வைத்து, பிஸ்கட் கொடுத்து, குழந்தை போல வளர்ப்பர். சிலர், கண்டாலே கல்லெறிவர். இதுபோல், வாழ்க்கையில் இன்ப துன்பம் எது வந்தாலும், அதை இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும் என, வேதங்கள் சொல்கின்றன. அந்த வேதத்தின் வடிவமாக, நாய் வாகனம் கருதப்படுகிறது. நாய்க்கு, “வேதஞாளி| என்ற பெயர் இருக்கிறது.

பைரவரை தினசரி வணங்கினாலும், அ~;டமி திதிகளில் வணங்குவது சிறப்பாகும். அன்றைய தினம் அஷ்டலட்சுமிகளும் வழிபடுவதாக புராண, சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அ~;டமிக்கு சிறப்பு அடைமொழி கொடுத்துள்ளனர்.

பைரவ பெருமான், ராகு-கேது எனப்படும் பாம்புகளை பூனூலாகத் தரித்தும், சந்திரனை சிரசில் வைத்தும், சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருபவராகிறார். காலமே உருவான பைரவரின் திருவுருவத்தில் பன்னிரெண்டு ராசிகளும் அடக்கம். மே~ ராசி தலையிலும், ரிஷப ராசி வாயிலும், மிதுன ராசி கைகளிலும், மார்பில் கடகமும், சிம்ம ராசி வயிற்றிலும், இடையில் கன்னியும், துலா ராசி புட்டத்திலும், லிங்கத்தில் விருச்சிகமும், தனுசு ராசி தொடையிலும், முழந்தாளில் மகரமும், காலின்கீழே கும்பமும், அடித்தளங்கில் மீன ராசியும் உள்ளதாக சாஸ்திர, ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

தேய்பிறை அஷ்டமி நாள் செவ்வாய்க்கிழமை வருவது மிகவும் சிறப்பாகும். அன்றைய தினம் பைரவரை வணங்கி பிரார்த்திக்க கடன் தொல்லை தீரும். மனஅமைதி, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் காசு, பணம் புரளும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கூடிவரும்.

செவ்வாடை சாற்றி, சிகப்பு அரளிப்பூ மாலை போட்டு, வெல்லம் கலந்த பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் வைத்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட சகல யோக பாக்யங்கள் கூடிவரும்.

ஒரு முழு தேங்காயை உடைத்து அதில் குடுமி இருக்கும் பக்கம் பிய்த்தால் அதில் மூன்று கண் போன்ற அமைப்பு இருக்கும். அந்த கண் பக்கம் இருக்கும் மூடியில் ஐந்துவிதமான எண்ணெய். அதாவது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் சேர்த்து திரி போட்டு விளக்கேற்ற சனி தோஷ்ங்கள், 7 அரை சனி, அஷ்டம சனி தாக்கங்கள் நீங்கும்.

போட்டி, பொறாமை, வயிற்றெரிச்சல் மூலம் வரக்கூடிய தோ~ம் கழியும். காத்து, கருப்பு, கெட்ட சே~;டைகள், துர் ஆவிகள் அண்டாது என்பது ஐதீகம். வெள்ளிக்கிழமை தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும். பைரவ காயத்ரி மந்திரம்,

ஓம் ச்வானத்வஜாய வித்மஹே, சூல ஹஸ்தாய தீமஹி, தன்னோ பைரவ ப்ரசோதயாத்.

இந்த காயத்ரியை அஷ்டமி வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லி வழிப்பட்டால் வாழ்வில் துன்பம் கஷ்டம் நீங்கி மன அமைதி செல்வ செழிப்புடன் வாழலாம்.

Tags: aanmigamBhairava UpasanaJothidamtamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவண்ணாமலை பாலியல் விவகாரம் – தொப்பியை கழற்றிய அரசு

Next Post

தசரா திருவிழா – மகிசாசூரனை வதம் செய்தாள் காளி

Related Posts

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.
Bakthi

July 31, 2026
மயிலாடுதுறை அருகே தண்ணீர் இன்றி வறண்ட குளத்தை கிரிக்கெட் மைதானமாக மாற்றி விளையாடும் இளைஞர்கள்
Bakthi

சீர்காழி இரட்டை காளியம்மன் கோயில் ஆடி உற்சவம்

July 31, 2026
மயிலாடுதுறை உள்ள கழனிவாசல் காவல் சோதனை சாவடியில் Gpay50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு
Bakthi

பனைமேடு அருள்மிகு செங்கம்மா காளியம்மன் ஆலய ஆடி திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பூவால் அபிஷேகம்

July 26, 2026
அறுபத்துமூவர் பேட்டையில் ஸ்ரீ சப்த மாதா என்கிற பிடாரி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை

July 24, 2026
Next Post
தசரா திருவிழா – மகிசாசூரனை வதம் செய்தாள் காளி

தசரா திருவிழா - மகிசாசூரனை வதம் செய்தாள் காளி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

கருவாழக்கரை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை.

July 31, 2026
மாமாகுடி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சீதளா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழா

ஆடி வெள்ளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் புகழ்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில், நெய் குள தரிசனம்

தொடுவாய் மீனவ கிராமத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.