மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், காதல் திரில்லிங் சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கிட்டி திரைப்படம், ஜூலை இரண்டாம் தேதி, 500 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தெரிவித்த படத்தின் இயக்குனர் மற்றும் குழுவினர், மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், படம் வெற்றி அடைய வேண்டி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர் :-
மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை காரைக்கால் கடலூர் பகுதிகளில், வி ஜே ப்ரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள கிட்டி என்ற திரைப்படம் ஜூலை இரண்டாம் தேதி வெளியாக உள்ளது, அதன் இயக்குனர் நெடுமாறன் மற்றும் படக்குழுவினர் இன்று மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குனர் நெடுமாறன் கிட்டி திரைப்படம் மூன்று காதல் கதைகளுடன் சுவாரசியமான புலனாய்வு பாதையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஒய் ஜி மகேந்திரன் திரைப்பட இயக்குனர் அரவிந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் 500 திரையரங்குகளில் படத்தை திரையிட உள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். படம் வெற்றி அடைய வேண்டி மயூரநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டதாக தெரிவித்தனர்.
பைட்: –
1.அசோக் குமார் – விநியோகஸ்தர்
2.நெடுமாறன் இயக்குனர்
3.விஷ்ணு பிரியா தயாரிப்பு நிறுவனம் இயக்குனர்
















