மயிலாடுதுறையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில், சேவை தீப ஒளி பேரணி என்ற பெயரில், தீபம் ஏற்றி கையில் தேசியக் கொடியுடன் பேரணி நடைபெற்றது, ஏராளமான பாரதிய ஜனதா கட்சியினர் பங்கேற்பு:-
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டும், அவர் தலைமை பொறுப்பு ஏற்று 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை தீப ஒளி பேரணி நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பெரிய எல் இ டி திரையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற பெயரில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் அதனை அடுத்து சேவை தீப ஒளி பேரணி என்ற பெயரில் தீபத்தை ஏற்றி விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் நடைபெற்ற பேரணியில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சியின் பங்கேற்று கையில் தேசிய கொடியை ஏற்றியபடி ஊர்வலமாக சென்றனர்.















