நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற முதியோர் தின விழா; ஆட்சியரிடம் பாடல் பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய முதியவர்கள்
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் சர்வதேச முதியோர் விழிப்புணர்வு பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் பிரவின்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் நாகை மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள மூதாட்டிகள், முதியவர்கள் கலந்துக் கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பாடல் பாடி தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து முதியவர்களுக்கு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள், பாட்டு போட்டிகள், நடனப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தங்களது கவலைகளை மறந்து பாடல்களை பாடி ஒருவரைக்கொருவர் மகிழ்ச்சிகளை பறிமாரிக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது















