நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்…
ஒஎன்ஜிசி பழைய எண்ணை கிணறுகளில் வேலை செய்வதால் ஏற்படும் நில அதிர்வு சத்தம்..
மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் குற்றச்சாட்டு…
மயிலாடுதுறை மாவட்டத்தில் அவ்வப்போது பகல், இரவு நேரங்களில் திடீரென்று அதிக சத்தத்துடன் வெடிகுண்டு வெடிப்பதுபோல் சத்தம் எழுவது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படத்தி வருகிறது. பயிற்சி விமானங்கள் பறந்துசெல்லும்போது ஏர் ரிலீஸ் செய்வதால் இந்த சத்தம் ஏற்படுவதாக தொடக்க காலங்களில் கூறப்பட்டு வந்த நிலையில். இந்த அதிர்வு சந்தம் வானில் இருந்து வரவில்லை பூமியின் அடிப்பகுதியில் இருந்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணை கிணறுகளில் பராமரிப்பு பணிகள் என்ற பெயரில் பக்கவாட்டில் புதிய கிணறுகளை உருவாக்குவதற்கு ஜெட்போன்ற கருவை கொண்டு பூமியை பிளப்பதால் ஏற்படும் சத்தம் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளரிடம் கூறுகையில்
காவிரிப்படுகை பகுதியில் பூமி அதிர்கிற அளவிற்கு பெரிய அளவில் வெடிச்சத்தம் குண்டுவெடிப்பை போன்று கேடடுக்கொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்துள்ளோம். ஆட்சியரால் விளக்கம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து அறிவிக்க வேண்டிய கடமை மாவட்ட நிர்வாகத்திற்கும், சுற்றுச்சூழல்துறைக்கு இருக்கிறது. கடமை தவறிஇருக்கிறார்கள். கடுமையான அதிர்வு சத்தம் படுத்திருக்கும் குழந்தைகள் அச்சமடைகிறது. எவ்வளவு பெரிய பாதிப்பை உருவாக்கும். அந்த நிகழ்வை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மக்கள் குடியிருப்பு பகுதியில் இதுபோன்று சத்தங்கள் ஏற்படக்கூடாது. சூப்பர் ஜெட்விமானங்கள் தரையிறங்கும்போது பூமியில் பெரிய சத்தம் எழும் என்று ஜோனிக்பூம் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். ஜெட்விமானம் ஏரை கிழித்துகொண்டு போவதால் சத்தம் வரும் என்று கூறுகிறார்கள். பூமிகுளங்குகிற அளவிற்கு அந்த அதிர்வு உள்ளது. இந்த சத்தம் தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டோம் அவரும் பூமியில் இருந்து வருவதாக ஆட்சியர் ஒத்துக்கொண்டுள்ளார். பெரும் வெடிப்பு சத்தம் 17ம் தேதி மதியம் 11.30 மணியளவில் பெரிய அத்தம் 26.8.2026ல் இதுபோன்று சத்தகம் கேட்டது இடையில் 3 மாதம் அந்த சத்தம் கேட்டவில்லை. கடந்த 3 மாதமாக ஜெட் விமானம் பறக்கவில்லையா குறிப்பிட்ட காலத்தில் இந்த சத்தம் வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் மாதம்வரை குத்தாலம் ஒஎன்ஜிசி ராஜகோபாலபுரம் ஓஎன்ஜிசி வேலையை தடுத்து நிறுத்தினோம். அதில் இருந்து இந்த சத்தம் வரவில்லை. காவிரி படுகையில் குறிப்பாக மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் பகுதியில் அதிக அளவில் சத்தம் வருவது குறித்து முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஒஎன்ஜிசி உள்ளிட்ட எண்ணை நிறுவனங்கள் ஜெட் எனர்ஜிரிலீஸ் என்று இருக்கிறது இது குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. 2020 பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்டம் வந்தது. புதிய ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்க முடியாது. பழைய கிணறுகளில் உற்பத்தியை பெருக்குவதற்கு சில தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள் மண்ணையும், நீரையும் அழிப்பதாக உள்ளது. 3 ஆயிரத்து 200 மீ அப்புறும் குழாய் கிணறு போகமுடியாது.பக்கவாட்டு கிணறு அமைத்தல், பெர்ப்பரேட்டிங் நில அடுக்கில் ஹைட்ரோகார்பன் சோன்கள் இருக்கிறது. அதை துளையிடுவது பெர்ப்பரேட்டிங் என்பது. பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்டம் படி பழைய கிணறு புதிய ஆட்டிவிட்டி இருந்தால் தனியாக அனுமதி பெறவேண்டும். பெர்ப்பரெட்டிங் நியூ ஹைட்ரோகார்பன் பல அடுக்குகளை துளையிடுவதை பயன்படுத்தும் முறை வெடிப்புசக்தியை பயன்படுத்தி நிலஅடுக்குகளை அதிரசெய்து உறிஞ்சி எடுக்கக்கூடிய தொழில்நுட்பம். பழைய கிணறில் பெர்ப்பரேட்டிங் கன் வட்டவடிவமாக இருக்கும் அதன் உள் வெடிபொருட்கள் சேப்புடு சார்ஜஸ் உள்ளே கூம்புவடிவமான ஜெட்டுகள் உள்ளது. கூம்புவடிவ ஜெட்டுக்கள் பூமியில் துளையிடக்கூடியது. ஏராளமான எண்ணிக்கையில் உள்ள வெடிபொருள் வெடிக்கும்போது கூம்புவடிவமான ஜெட் சிமெண்ட் ஷீட்டை உடைத்து பாறைகளை நொருக்கி அதன்சுற்றுப்பகுதிகளை நொருக்கிகொண்டு போகும். ஹைட்ரோகார்பன் எரிவாயு, எண்ணை குழாயில் நிரம்பும் அதனை கிணற்றில் இருந்து உறிஞ்சு எடுப்பார்கள். அனுமதிபெறாதவரையில் சட்டவிரோதம். ஒஎன்ஜிசி பெர்ப்பரேஷன் செய்கிறது. ஆர்டிஓ தலைமையில் நட்நத பேச்சுவார்த்தையில் நாங்கள் சுட்டிகாட்டியுள்ளோம். காவல்துறையினரை கொண்டுவந்து இறக்கி வேலையை தொடங்கி நடத்துகிறார்கள் அதன்பிறகுதான் அதிர்வு சத்தம் வருகிறது. பெர்ப்பரேட்டிங் கண்ணில் நிறைய மெத்தேடு உள்ளது. ஹைவிசாலிட்ட மெட்டல் ஜெட்டுகள் உள்ளது. வெவ்வேறு லவலில் எடுப்பார்கள். அதிக உப்பாக இருக்கக்கூடிய தண்ணீயும், நாம் குடிக்கும் தண்ணீயும் ஒன்றாக கலந்துகொண்டு இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்டம் வந்தாலும் அதனை ஒழித்துகட்டுவத ஒஎன்ஜிசிக்கு நன்றாக தெரியும். மாவட்ட நிர்வாகத்திற்கு அதுபற்றிய விபரங்கள் தெரியவில்லை. இதுசட்டவிரோதமானது என்று சொன்னாலும் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.
ஜெட் விமானம் பறக்கும் 1235 கி.மீ. வேகம் ஒலியின் வேகத்தைவிட ஜெட் போகும் போது காற்று கூம்புவடிவமாக பின்தொடரும். தரையிறங்கும் போது சத்தம் வரும். ஜெட் விமானம் பறக்கம்போது சத்தம் கேட்காமல் இருந்துள்ளது. ஜெட் பறக்காத அன்று இந்த அதிர்வு சத்தத்தை நாங்கள் கேட்டுள்ளோம். ஒஎன்ஜிசி எண்ணெய் கிணறுகளில் ஆழ்துளைப்பதால் வரும் சத்தம் குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹைட்ரோகார்பன் தொடர்பான நுண்கள், ஆய்வுகட்டுரைகளை படித்து முடிவுக்குவர முயற்சி செய்கிறோம். அவரவர்கள் ஒரு விளக்கத்தை சொல்கிறார்கள். ஜெட் என்றால் விமானம் என்றுதான் விளக்கம் சொல்கிறார்கள். பெர்ப்பரேட்டிங் ஹைட்ரோகார்பன் சோன் நடக்கிறது. பூமிக்கு அடியில் இருந்து சத்தம் வருகிறது.
குத்தாலனத்தில் 49 கிணறுகளை இணைத்துள்ளனர். இந்த பகுதி மரணபூமியாக மாறப்போகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். குத்தாலம் பகுதி மக்கள் வெடிகுண்டு மேல் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணரும். நமக்கு இன்னொரு பூமி, தாயகம் கிடையாது. 2013ம் ஆண்டு முதல் போராடி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டசத்தை 2020ம் ஆண்டு சட்டம் நடைமுறைக்கு வந்தது. புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்கள் அனுமதிக்கக்கூடாது என்று கூறியது வரவேற்கிறோம். விவசாயம் சாராத சில தொழில்களால் இப்பகுதி பாழாகி இருக்கிறது. ஒரு தொழில்தான் ஹைட்ரோகார்பன் எண்ணை எரிவாயு கிணறு. பழைய கிணறுகள் எடுப்பதை அதில் தடுக்கவில்லை. ஒஎன்ஜிசி பக்கவாட்டு கிணறு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வெவ்வேறு நிலையில் உள்ள ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒஎன்ஜிசி அனுமதிபெறவில்லை. மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் காட்டிகொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை மாவட்ட நிர்வாகம். அழிவுக்குமேல் அழிவை கொண்டுவந்துகொண்டு இருக்கிறார்கள். நிர்வாகத்திற்கு எதுவும் தெரியாததால் எங்கள் நிலம், உடமை, வாழ்வாதாரத்தை அழிக்கின்றனர் அதற்காக மக்களுக்காக நாங்கள் போராடுகிறோம்.
பேட்டி..
1) பேராசிரியர் ஜெயராமன் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்.
2) விட்டுச்செல்வன் குத்தாலம்
3) மேனகா குத்தாலம்,
4) கண்ணன் குத்தாலம்







