சீர்காழி அருகே இரண்டு ஆண் மயில் சண்டை இடுவதை கண்டு ரசித்த பொதுமக்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தேசிய பறவையான மயில் அதிகரித்து காணப்படுகிறது. தற்பொழுது விளைநிலங்களில் விவசாயிகள சாகுபடி செய்துள்ளதால். வயல் பகுதிகளில் இருந்த மயில்கள் தற்பொழுது குடியிருப்பு பகுதிகளில் அதிகரித்து காணப்படுகிறது. இதில் சில மயில்கள் வீட்டு விலங்குகளான நாய்களால் பாதிப்பு ஏற்பட்டும் வருகிறது. இந்த நிலையில் சீர்காழி கொள்ளிடம் மற்றும் கடற்கரையோர கிராமங்களில் அதிக அளவில் மாங்குரோவ் மற்றும் சவுக்கை மரக்காடுகள் அதிகரித்து காணப்படுவதால் இப்பகுதிகளில் மயில் இனப்பெருக்கம் அதிகரித்து. கிராம பகுதிகளில் வீடுகளில் செல்லப்பிராணியாக வளரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மயில் சீர்காழி அருகே எடமணல் மேலப்பாளையம் கிராமத்தில் சாலையில் இரண்டு ஆண் மயில்கள் நீண்ட நேரமாக சண்டையிடும் காட்சி அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்







