சீர்காழியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒழிக்கவும்,மக்களை ஏமாத்தும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் நகல் எரித்து போரட்டம்
50-பேர் கைது
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற பெயரை வி பி ஜி ராம்ஜி என்று மாற்றி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க திட்டமிடும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து அந்த சட்ட நகலை எரித்து கருப்பு பேட்ச் அணிந்து போராட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை
மாவட்டம் சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி மாற்றுத் திறனாளிகள் ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து வி பி ஜி ராம்ஜி சட்ட நகலை எரித்தும்,திட்டத்தை திரும்பெற வலியுறுத்தி போரட்டத்தில் ஈடுப்பட்டனர் மாற்றுத்திறனாளிகள் சங்க நகர தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அழைத்துச் சென்று அடைத்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது

















