வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலக வளாக முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வேலூர்மாவட்டம், வேலூர் வேலப்பாடியில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் முன்பாக வேலூர் மாவட்ட அனைத்து ஆவண எழுத்தர்கள் மற்றும் ஆவண எழுத்தர் உதவியாளர்கள்,தட்டச்சர்கள் சார்பாக பத்திரப்பதிவு துறையை தனியார் துறைக்கு தாரைவார்ப்பதை கண்டித்து சுரேஷ் ,செல்வகுமார் ,ஞானசேகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 3.0 வருகை இல்லா பதிவேடு மற்றும் ஆவணம் இல்லா பதிவேடு முறைகளை டெண்டர் மூலம் தனியார் நெட் சென்டருக்கு மாற்றுவதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் குடியாத்தம் பேர்ணாம்பட்டு கே வி குப்பம் அணைக்கட்டு பள்ளிகொண்டா பகுதியிலிருந்து ஆவண எழுத்தர்கள் ஆவண எழுத்தர் உதவியாளர்கள் அவனை எழுத்தர்களின் கணினி தட்டச்சு பணியாளர்கள் வழக்கறிஞர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வருகிற 10 ,11 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என கூறினர்
பேட்டி:சுரேஷ் (ஆவண எழுத்தர் சங்கம்)







