ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் புதிய நடைமுறையை அமல்படுத்தினால் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்படுவதாக கூறி செம்பனார்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நகல் எரித்து போராட்டம் கைது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் 100 நாள் திட்டத்தில் VB -G RAM – G திட்டத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பழைய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் புதிய நடைமுறையை கைவிடக் கூறி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசியப்படை இணைந்து போராட்டம் நடைபெற்றது ஒன்றிய தலைவர் விஜயரங்கன் தலைமையில் நடைபெற்றது பலர் பங்கேற்றனர் இதில் ஒன்றிய அரசை கண்டித்து நகல் எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

















