திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரத்து,ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு போக்குவரத்து,ஆட்டோ மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ஹனிபா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பிரதான கோரிக்கையாக அரசு போக்குவரத்தை பாதுகாக்க வேண்டியும் மற்றும் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை தமிழக அரசே வழங்கிட கோரியும்.
மேலும் பைக் டாக்ஸியை தடை செய்யப் வேண்டும். ஆட்டோவிற்கு என்று தனி செயலியை உருவாக்க வேண்டும் என்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைத்து அத்தியாவசிய விலையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்














