குடியாத்தம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கிராம நிர்வாக அலுவலகம் எதிரே தர்ணா போராட்டம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் நடுவே ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கிராமத்தின் வழியாக நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட கார் மற்றும் பள்ளி வாகனங்கள் மற்றும் தோல் தொழிற்சாலைக்கு செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கும் மற்றும் பள்ளிகளுக்கும் சென்று வருகின்றன.ரயில்வே சுரங்கப்பாதை அமைத்தால் மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பல கிலோமீட்டர் சுற்றி வரும் நிலை ஏற்படும் எனவும் விவசாய நிலங்களில் வீட்டுமனை போட்டு விற்பனை செய்யும் புரோக்கர்களுக்கு ஏதுவாக ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் ரயில்வே சுரங்கப்பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் 110ன் கீழ் அறிவித்த விதிகளின்படி மேம்பாலம் அமைத்து தர வேண்டும் எனவும்ரயில்வே துறை மற்றும் வருவாய்த் துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து கீழ்ப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.உடனடியாக இந்த திட்டத்தை கைவிட்டு மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் லதா தெரிவித்துள்ளனர்.
















