விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பேமஸ் ஆனவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கிய ஸ்டார்ட் மியூசிக், ஊ சொல்றியா… ஊ ஊ சொல்றியா போன்ற நிகழ்ச்சிகளும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றன.
பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிரவீனும் விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார். ஆனால் திருமணமான 6 ஆண்டுகளில் பிரவீனுக்கும், பிரியங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதையடுத்து டிஜே வஷி என்பவருடன் பிரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டு கடந்த மாதம் பிரியங்கா, டிஜே வஷியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து தன்னுடைய கணவரோடு லண்டனுக்கு ஹனிமூன் சென்ற பிரியங்காவைப் பற்றி பல்வேறு வதந்திகள் இணையத்தில் வெளிவந்தன. வஷியை திருமணம் செய்யும் முன்னரே பிரியங்கா கர்ப்பமானதாகவும், அதனால் தான் இருவரும் அவசர அவசரமாக திருமணம் செய்துகொண்டார்கள் என்றெல்லாம் வதந்திகள் சோசியல் மீடியாவிலும் யூடியூப்பிலும் உலா வந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் உங்க வாய் உங்க உருட்டு என்கிற கேப்ஷன் அடங்கிய டீ சர்ட் அணிந்து, குபீரென சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளார்.