சீர்காழியில் பள்ளி அருகாமையில் உள்ள கடைகளில் சிகரெட் புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் திடீர் ஆய்வு சிகரெட் உள்ளிட்டவைகளை கைப்பற்றி வழக்குப்பதிவு
தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா, ஹான்ஸ் பொருட்கள் மற்றும் சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் விற்கப்படுவதை கண்காணித்து தடுக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. சினேகா பிரியா உத்தரவின் பேரில் சீர்காழி டிஎஸ்பி சரவணன், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரராகவன், கலியபெருமாள், சிறப்பு இன்ஸ்பெக்டர் தீபக் ராஜ் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் சீர்காழி முழுவதும் பள்ளி – கல்லூரிகள் அருகாமையில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் சிகரெட் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை கைப்பற்றி கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.தொடர்ந்து இதுபோன்று திடீர் சோதனை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீஸார் எச்சரித்தனர்














