பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அவரது திரு உருவ சிலைக்கு மாயூரம் தமிழ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் :-
தமிழக முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழா இன்று கடைபிடிக்கப்படுகிறது இதனை முன்னிட்டு மயிலாடுதுறை பாசிக்கடை தெருவில் அமைந்துள்ள அன்னாரது திருஉருவ சிலைக்கு மாயூரம் தமிழ்ச்சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தமிழ் சங்கத் தலைவர் ஜெனிபர் பவுல்ராஜ் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இதுபோல் மாயூரம் நாடார் உறவின்முறை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது














