• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெரியார் நூலக விவகாரத்தில் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை-திருமுருகன் காந்தி

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாட்டில் தமிழ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழை நீக்கிவிட்டு இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது நடந்து கொண்டிருக்கிறது. தவெக அரசு தமிழ் காப்பில் கவனம் செலுத்தவில்லை. ஆறு மாத ஆட்சியில் தமிழுக்காக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை.திராவிட தலைவர்களின் குடும்பங்களில் சமஸ்கிருத மொழியில் திருமணம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. அவர்களை தமிழ் கண்டிக்க வேண்டும். சமஸ்கிருதம், வைதீக முறையில் திருமணம் செய்ய நினைப்பவர்கள் கொள்கையை விட்டு வெளியேற வேண்டும்.ஜெம் வீரமணி வழக்கு எப்ஸ்டீன் பைலை போன்றது, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பதில்லை ஆனால் உதயநிதியை கைது செய்கிறார்கள்.பெரியார் நூலக விவகாரத்தில் இதுவரை பதிப்பாளர்களோ, அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை – வேலூர் மாவட்டம் காட்பாடியில் மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேட்டி.

வேலூர் மாவட்டம்காட்பாடி, சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மே 17 இயக்கம் சார்பில் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் “தமிழ் காப்பு பரப்புரை நடை பயண” நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விசிக, எஸ்டிபி.ஐ, மதிமுக உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வந்த மே 17 இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,ரயில் நிலையம் உட்பட மத்திய அரசு நிறுவனங்களில் மூன்றாம் இடத்தில் தமிழ் எழுத்து உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தி உள்ளது. தமிழ்நாட்டில் தமிழை நீக்கி விட்டு இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது நடந்து கொண்டிருக்கிறது.வங்கிகளில் படிவத்தின் மூலம் இந்தி திணிக்கப்படுகிறது. இப்போது எந்த இடத்தில் போனாலும் இந்தியை முன்னிலைப்படுத்தக் கூடிய வேலை நடந்து கொண்டிருக்கிறது.நெடுஞ்சாலை துறையில் எல்லா இடங்களிலும் இந்தி திணிக்கப்படுகிறது. காரைக்குடி பக்கம் எல்லாம் தமிழ் ஆங்கிலம் அல்லாமல் இந்தி மட்டுமே உள்ள நெடுஞ்சாலை பதாகைகளும் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது இதனை அரசு தடுக்க வேண்டும்.தவெக அரசு தமிழ் மொழிக்காப்பில் பெரிய கவனம் செலுத்தவில்லை. ஒரு ஆலோசனைக் குழுவை தமிழ் அறிஞர்களைக் கொண்டு உருவாக்க வேண்டும். தமிழ் மொழிக்காக திட்டங்களை அறிவிக்க வேண்டும். ஆனால் ஆறு மாதத்தில் அதுபோன்று ஒரு அறிவிப்பு கூட வரவில்லை. இதை தவெக அரசு திருத்திக் கொண்டு தமிழறிஞர்களைக் கொண்டு தமிழைக் காக்கும் செயலை செய்ய வேண்டும்.

திராவிட தலைவர்களின் குடும்பங்களில் சமஸ்கிருத மொழியில் திருமணம் நடந்திருப்பது குறித்து கேட்டதற்கு,இங்கு உள்ள திராவிட தலைவர் தங்கள் வீட்டு திருமணத்தை சமஸ்கிருத மொழியில் நடத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்.அவர்கள் இந்த கொள்கையை ஏற்று பதவி வகித்து அதன் மூலம் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த பதவியில் இருந்து கொண்டு கொள்கையை கைவிட்டு விட்டு இதை செய்திருக்கிறார்கள் என்றால் அது கண்டிக்கத்தக்கதே. வைதீக முறையில் நடப்பதாக இருந்தால் நீங்கள் அந்த கொள்கை உள்ள கட்சியில் சேர்ந்து நடத்திக் கொள்ளலாம். திராவிடத்தை கைவிட்டு விட்டு அதற்கு போக வேண்டும். தொண்டர் செய்வதை புரிந்து கொள்ள முடியும் ஆனால் ஒரு மதிப்புமிக்க இடத்தில் உள்ள தலைவர் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.திராவிட கொள்கை கொண்ட எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி உங்களால் கொள்கையை பின்பற்ற முடியவில்லை என்றால் கொள்கையை ஒரு ஓரமாக வைத்துவிட்டு உங்களுக்கு எந்த கொள்கை பிடிக்கிறதோ அங்கு செல்லலாம்.இதனால் திராவிட கொள்கையை நேசிப்பவர்கள் எல்லோர் மீதும் தவறாக இருப்பார்களோ என்று எண்ணம் வருகிறது. பெரியாரின், திராவிடத்தின் சாமானிய தொண்டனை இழிவுபடுத்தாதீர்கள். குடும்பத்திற்காக வைதீக முறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் தயவு செய்து கட்சியில் இருக்காதீர்கள். இவர்கள் மீது கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்களே கொள்கையை கடைப்பிடிக்காவிட்டால் நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும். திராவிட கொள்கை குழி தோண்டி புதைத்த ஒரு திராவிட கட்சியும் அதன் தலைவரும் தேவையில்லை.பெரியார் அறிவுலக நூலகத்தில் ஊழல் நடந்ததை பார்த்து அதிர்ச்சியாகவும், அவமானமாக உள்ளது. நூலகத்துக்குள் ஊழல் செய்யக்கூடிய ஊழல்வாதிகளை எந்த ஆட்சி, கட்சியாக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது. தவெக அரசின் ஆட்சியில் இதை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். இதுவரை அதில் அதிகாரிகள், பதிப்பாளர்கள் என யாரும் கைது செய்யப்படவில்லை. பதிப்பாளர் என் கைது செய்யவில்லை, பதிப்பாளரை பரிந்துரைத்த அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
குற்றச்சாட்டுக்குள்ளான அச்சக பதிப்பாளர் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக நூலகத் திட்டத்தை தவறாக பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது ஊழல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.பெரியார் அறிவுலகம் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளிக்கும் திட்டம் உள்ளதா என கேட்டதற்கு, அவரை நாங்கள் எல்லாம் போய் எப்படி சிந்திக்க முடியும் காவல்துறையும் ஊடகங்களும் தான் அவரது பார்வைக்கு இதைக் கொண்டு செல்ல வேண்டும்.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீதான குற்றச்சாட்டு குறித்து பலதரப்பினர் கண்டித்தும் ஏன் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என தனி சட்டம் உள்ளதா என்றும் தெரியவில்லை . மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை என்றால், சாமானிய பெண்களின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. காவல் நிலைய மரணங்கள் குறித்து கைது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இதற்கெல்லாம் காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் தான் பதில் சொல்ல வேண்டும். உதயநிதி அவதூராக பேசியபோது யார் புகார் அடிப்படையில் அவரை கைது செய்தீர்கள் அப்போது மட்டும் நடவடிக்கை எடுத்தீர்கள் அதேபோன்ற நடவடிக்கையை இப்போதும் எடுங்கள் என்றுதான் நாங்கள் குறிப்பிடுகிறோம். ஒருவர் மீது நடவடிக்கை பாயும் போது மற்றொருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக தவறு செய்யும் போது எந்தவித கண்டிப்போ, சட்டரீதியான நடவடிக்கையோ முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நான் குற்றச்சாட்டாக வைக்கிறேன்.நீதிபதிகளும் ஏன் இது போன்ற விஷயத்தை கையில் எடுத்து பேசவில்லை என்றும் நான் கேட்கிறேன். தீபம் ஏற்றுவது தொடர்பாக நேரடியாக கள ஆய்வு செய்யும் நீதிபதிகள் இருக்கும் இந்த நாட்டில் இது போன்ற விஷயங்களை ஏன் கையில் எடுப்பதில்லை. தமிழ்நாட்டு அரசையும், காவல் துறையையும் ஏன் கேள்வி கேட்கவில்லை. அப்படி என்றால் நீதிமன்றங்கள் விருப்பு, வெறுப்பு வேறுபாடுகளோடு இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. சாமானியர்களுக்கு மான நீதிமன்றம் கேட்க வேண்டும் கேட்கும் என எதிர்பார்க்கிறேன்.கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் செயல்பாடுகள் தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா என எதிர்பார்க்கிறோம்.
கைதிகள் தப்பியோட்டம் என்பதை பீகார் செய்தியாக பார்க்கிறேன். இப்போது அது தமிழ்நாட்டிலும் நடக்கிறது. சிறைகள் பலவீனம் ஆகிவிட்டதா? அல்லது கைதிகள் பலமாக்கி விட்டார்களாஎன்று தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பல விஷயங்கள் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது.ஜெம் வீரமணி வழக்கில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. தமிழ்நாட்டின் எப்ஸ்டீன் பைலாக ஜெம் வீரமணி வழக்கு உள்ளது. இது தொடர்பாக அனைவரும் விசாரித்து கைது செய்யப்பட வேண்டும், வெளிப்படையில் தன்மையுடன் நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என
திருமுருகன் காந்தி கூறினார்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் முருகர் வள்ளி தெய்வானைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை

Next Post

ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

Related Posts

டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்

November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

நாகை ஆட்சியர் வளாகத்தில் மழைநீர் வடிய வெட்டப்பட்ட ராட்சத பள்ளத்தால் மாற்றுத்திறனாளிகள் அவதி

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

ஶ்ரீகெளரி மாயூரநாதரிடம் வஜ்ராயுதத்தை பெற்று சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

மயிலாடுதுறையில் வேலைக்குச் சென்ற பெண் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் ESSK செவிலியர் கல்லூரி இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காவிரியில் புகழ்பெற்ற துலா உற்சவர் தீர்த்தவாரி இன்று நடைபெறுவதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை

by Satheesa
November 17, 2026
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
News

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தனுஷ் நற்பணி இயக்கம்

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6