October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

நவ கைலாய ஸ்தலங்கள்

by Satheesa
August 28, 2025
in Bakthi
A A
0
நவ கைலாய ஸ்தலங்கள்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள 9 சிவாலயங்களை நவ கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒன்பது கோவில்களும் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தலங்களில் உள்ள சிவனை தரிசித்தால் பாவங்கள் விலகி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நவகைலாய ஸ்தலங்கள் எப்படி உருவாகின என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் அறிவோம்.

அகத்தியரின் சீடர்களில் ஒருவரான உரோமச முனிவர், சிவ பெருமானை நேரில் தரிசிக்கவும், அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்றும் எனவும் விரும்பினார். இதற்காக தனது குருவான அகத்தியரிடம் வழி கேட்டார். அதற்கு பதிலளித்த அகத்தியர், தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விடு. அந்த 9 மலர்களும் எந்த இடத்தில் கரை ஒதுங்குகின்றனவோ அந்த இடங்களில் சங்கு மூலம் நீராடு.

தாமரைகள் ஒதுங்கிய இடத்தில் நவகிரகங்களின் வரிசையில் சிவ லிங்கங்களை பிரதி~;;டை செய்து, சிவனை வழிபட்டால், சிவ பெருமானின் காட்சி கிடைக்கும். முக்தியும் கிடைக்கும் என்றார். அகத்தியர் சொன்ன படியே 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டு, அவைகள் கரை ஒதுங்கிய இடங்களில் நீராடி, உரோமச முனிவர் முக்தி பெற்றதாக சொல்லப்படுகிறது. அவர் உருவாக்கிய இந்த ஒன்பது சிவாலயங்களே நவ கைலாயங்கள் என அழைக்கப்படுகின்றன.
நவகிரங்களின் முதன் கடவுளாக வீற்றிருக்கும்

  • சூரியன் – பாபநாசநாதர் கோவில் – பாபநாசம்
  • சந்திரன் – சேரன்மாதேவி கைலாசநாதர் கோவில் – சேரன்மாதேவி
  • செவ்வாய் – கோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் – கோடகநல்லூர்
  • ராகு – குன்னத்தூர் கோத பரமேஸ்வரர் கோவில் – குன்னத்தூர்
  • குரு – முறப்பநாடு கைலாசநாதர் கோவில் – முறப்பநாடு
  • சனி – ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோவில் – ஸ்ரீவைகுண்டம்
  • புதன் – தென்திருப்பேரை கைலாசநாதர் கோவில் – தென்திருப்பேரை
  • கேது – ராஜபதி கைலாசநாதர் கோவில் – ராஜபதி
  • சுக்கிரன் – சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோவில் – சேர்ந்தபூமங்கலம்

இவற்றில் முதல் மூன்று தலங்கள் மேல் கைலாயம் என்றும், அடுத்த மூன்று தலங்கள் நடுகைலாயம் என்றும், கடைசி மூன்று தலங்கள் கீழ் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் குன்னத்தூர் தவிர மற்ற அனைத்து தலங்களிலும் ஈசன், கைலாசநாதர் என்ற திருநாமத்துடனேயே வீற்றிருந்து அருள் செய்கிறார்.
நவகைலாயங்களில் முதல் ஸ்தலமான திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே பாபநாச திருக்கோயில் சூரியனுக்குரியது.

சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தினத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார். எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது விமலை சக்தி பீடமாகும். ராஜ கோபுரத்தை அடுத்து நடராஜர் தனிச்சன்னதியில் ஆனந்த தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை புனுகு சபாபதி என்று அழைக்கின்றனர்.

கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்று கொண்டிருக்கையில் வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமண கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார்.

அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர். அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவ~;டா என்பவனை குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவ~;டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரை கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மஹத்தி தோ~ம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான்.
வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோ~ம் நீங்கும் என்றார்.

அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை “பாபநாசநாதர்’ என்கின்றனர்.

இத்தலத்து லிங்கத்திற்கு ” முக்கிளா லிங்கம்’ என்ற பெயரும் உண்டு. கருவறையில் ருத்ராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசர் இருக்கிறார். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களே கிளா மரமாக மாறி இறைவனுக்கு நிழல் தந்தும், அதர்வண வேதம் ஆகாயமாக இருந்தும் இவரை வழிபட்டது. எனவே சிவனுக்கு இப்பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

பொதிகை மலையில் உருவாகி மலைகளில் விழுந்து வரும் தாமிரபரணி நதி இக்கோயிலுக்கு அருகேதான் சமநிலையடைகிறது. தினமும் உச்சிக்கால பூஜையின் போது தாமிரபரணி நதியில் மீன்களுக்கு நைவேத்திய உணவுகளைப் படைத்து பூஜைகள் செய்யப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு தைப்பூசத்தன்று நடராஜர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே நின்று நடன தரிசனம் தந்தார்.

எனவே இங்கு தைப்பூசத்தில் நந்திக்கு சந்தனக்காப்பு செய்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அம்பாள் உலகம்மை சன்னதி முன்பு ஒரு உரல் இருக்கிறது. இதில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதனை இடிக்கின்றனர்.

மஞ்சள் தீர்த்தத்தை சிறிது அருந்தினால், திருமண, புத்திர பாக்கியங்கள் கிடைக்கும், பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம்.
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோ~ம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம்

Tags: Nava Kailaya Sthalassouth indian templetamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்

Next Post

திமுக அரசு மீது குறை கூறுவது சிலரின் வாடிக்கை : திருமாவளவன் கருத்து

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
Bakthi

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 23, 2026
வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை
Bakthi

வரலட்சுமி நோன்பை முன்னிட்டு, வீடுகளில் பெண்கள் சுமங்கலி வரம் வேண்டி, குத்துவிளக்கு பூஜை

August 21, 2026
Next Post
தி.மு.க., கூட்டணியில் இருப்பதால் அமைதியாக இருக்க மாட்டோம் : திருமாவளவன்

திமுக அரசு மீது குறை கூறுவது சிலரின் வாடிக்கை : திருமாவளவன் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜா

December 29, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
பயிர் காப்பீட்டில் பெரும் முறைகேடு; விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 20% இழப்பீடு கட்டாயம்

புழலில் லாரி உரிமையாளர் மீது அவதூறு பரப்பி பணம் பறிக்க முயன்ற நான்கு பேர் கைது

September 30, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.