மயிலாடுதுறை சின்னக்கடை வீதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சம்வத்ஸராபிஷேகம் மற்றும் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னகடை வீதியில் கச்சேரி பிள்ளையார் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. பழமையும் புகழும் வாய்ந்த இவ்வாலயத்தில் கும்பாபிஷேக தினமான இன்று சம்வத்ஸராபிஷேகம் மற்றும் ஐப்பசி மாத சங்கடகர சதுர்த்தி விழா மற்றும் நடைபெற்றது. இதனையொட்டி சித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாழ்வு வளம் பெற்று சுபிட்சம் அடைய வேண்டியும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.







