மிலாடி நபியை முன்னிட்டு எலந்தங்குடியில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய சிறுவர் சிறுமியர் பங்கேற்று, நபிகள் நாயகர் பொன்மொழிகளை பாடியபடி ஊர்வலமாக சென்றனர் :-
இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த நாள் இன்று மிலாது நபி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலும் ஜமாத்தார்கள் சார்பில், சிறப்பு பேரணிகள் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தில் பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமானோர் பங்கேற்று நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளையும் திருப்பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது, மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசலில் பேரணி நிறைவடைந்தது. இஸ்லாமிய பெரியவர்கள் மாணவ மாணவிகளுக்கு பிஸ்கட் சாக்லேட் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினர்.
பைட் :-
மௌலவி பஹ்ருதீன் பைஜி














