மயிலாடுதுறையில் டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்
இரவு கூடுகை என்ற தலைப்பில் விழித்தெழ விழித்திருப்போம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்:-
நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை நகரில், இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமுல் காஸ்ட்ரோ தலைமையில் தேசம் விழித்தெழ விழித்திருப்போம்
இரவு கூடுகை என்ற தலைப்பில் மாலை 6 மணியில் இருந்து நாளை காலை 6மணிவரை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்று வரும் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். டெல்லியில் போராடும் மாணவர்களின் கோரிக்கையான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாணவர்கள் மீது எந்தவித அடக்குமுறையும் மேற்கொள்ளக்கூடாது என்றும், கல்வி மற்றும் மாணவர் நலன் தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைப்புகளின் நிர்வாகிகள் பேசுகையில், மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருவதாகவும், ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் துணை நிற்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.















