சென்னை வண்டலூர் கிரசன்ட் கல்லூரியில் முதலீட்டாளர்கள், நிபுணர்கள் உடன் மயில்சாமி அண்ணாதுரை உரை
சென்னை வண்டலூர் , கிரசென்ட் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் (CIIC)தனது 5-வது ‘மெகா டெமோ டே’ மற்றும் ‘ஸ்டார்ட்அப் ஷோகேஸ் 2026’ . இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் நிகழ்வு, 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இன்று, வண்டலூரில் கிரசன்ட்ட் CIIC வளாகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கு கூட்டத்தில்
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சுவாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
இந்த கருத்தரங்கில்
நாடு முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் 150-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய தளமாக இந்நிகழ்வு அமைகிறது. இதில் உயிர் அறிவியல் தொழிற்துறை 5.0, ஸ்மார்ட் மற்றும் தூய்மையான போக்குவரத்து மற்றும் வேளாண் வணிகம் மற்றும் ஊட்டச்சத்து மருந்துகள் சார்ந்த MSME-க்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ந்து வரும் துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் இடம்பெறவுள்ளன.













