சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி அறக்கட்டளை சார்பில் குமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பகுளத்தில் மகா தீப ஆரத்தி நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் குமரி மாவட்டத்தில் சிவன் பிரம்மா விஷ்ணு வீற்றிருக்கும் சிவாலயங்களில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று. உலக மக்களின் நன்மைக்காகவும் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி, நடராஜ மூர்த்தி வாகன ஊர்வலம் ரதவீதிகள் வழியாக பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ரத வீதிகள் வழியாக தெப்பகுளத்தை மேளதாளங்கள் முழங்க வந்தடைந்து.அதனைத் தொடர்ந்து
தெப்பகுளத்தின் மேற்குப் படித்துறையில் மகா தீப ஆரத்தி நடைபெற்றது. இதில் முதலில் பல நதிகளில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தை நம்பூதிரிகள் தெப்பக்குளத்தில் தெளித்தனர். அதனைத் தொடர்ந்து பன்னீர் அபிஷேகம், புஷ்பாசியும், நறுமண ஆரத்தி, கற்பூர ஆரத்தி, 108 தீப ஆர்த்தி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள், சிவனடியார்கள் மற்றும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய் சுந்தரம், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் மாதவன் உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சுசீந்திரம் தீர்த்த தெப்பக்குளத்தில் மகா தீப ஆரத்தி நடைபெற்றது. இதில் சுற்றுலா வந்த வெளி மாநில பக்தர்களும் , உள்ளூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானவர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட மஹா தீப ஆரத்தி அறக்கட்டளை தலைவர் காமராஜ் தலைமையில் செயலாளர் ஆனந்தன், பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர். கும்பாபிஷேக வர்ணனையாளர் கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார் பக்தர்கள் நல்ல ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

















