தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சமீபத்தில் தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியிருக்கிறார். ‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து நடிப்பை நிறுத்துவதாக அறிவித்த அவர், தற்போது முழுமையாக அரசியலுக்கே திரும்பி இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் சென்னையில் மிக கோலாகலமாக நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகின் பலர் கலந்துகொண்டனர். ஆனால், நடிகர் விஜய் அந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை.
இதற்கு பின்னணியாக, தற்போது ஒரு இனிமையான தகவல் வெளியாகியுள்ளது. திருமண விழாவுக்கு நேரில் வர முடியாததால், நடிகர் விஜய் தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் ஐசரி கணேஷ் மகளுக்கும் அவரது குடும்பத்திற்கும் விருந்தளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.