கைக்குழந்தையுடன் மதுபோதையில் கிடந்த பெண். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டனர்.
சீர்காழி பேருந்து நிலையத்தில் மதுபோதையில் கைக்குழந்தையுடன் கிடந்த பெண்ணை தகவலின் பேரில் வியாழக்கிழமை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் மீட்டு போதையை தெளியவைத்து குழந்தைக்கு புட்டிபால் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழையபேருந்துநிலையம் பேருந்து நிறுத்த வளாகத்தில் 25வயது மதிக்கதக்க பெண் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். அருகில் 8மாத பெண் குழந்தை பசியுடன் அழுதுக்கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி வியாபாரிகள், பயணிகள் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிபடைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் பிரியங்கா தலைமையிலான போலீஸôர் மதுபோதையில் கிடந்த பெண்ணை மீட்டு தண்ணீரை தலையில் ஊற்றி போதையை தெளியவைத்தனர். பின்னர் புதிய சேலை வாங்கிகொடுத்து மதுபோதையிலிருந்த பெண்ணுக்கு உடுத்திட உதவி செய்து அழைத்துவந்தனர். தொடர்ந்து பசியால் அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு புட்டிபால் வாங்கிகொடுத்து பெண் பயணிகள் உதவியுடன் குழந்தையின் அழுகையை ஆசுவாசப்படுத்தினர். சிங்கபெண் சிறப்பு படையினர் விசாரணையில் மதுபோதையில் இருந்த பெண் கோயில் திருவிழாக்களில் பலூன் விற்பனை செய்பவர் என்றும்,திருமுல்லைவாசல் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவில் பலூன் விற்பனை செய்ய வந்தபோது தனது கைகுழந்தையுடன் மதுபோதையில் பேருந்துநிலையத்தில் கிடந்தது தெரியவந்தது. பின்னர் கைக்குழந்தையையும் அந்த பெண்ணையும் மீட்டு 108ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.














