AR தங்க கோட்டையில் சர்வதேச மகளிர் தினம் விழா கொண்டாடப்பட்டது *
திருப்பத்தூர் மாவட்டம்
ஏலகிரியில்
சுய உதவிக் குழு பெண்களுக்கு விற்பனை வாய்ப்பு பல துறைகளைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்பு
AR தங்க கோட்டை நிறுவனத்தில் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் பெண்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பெண்கள் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும், பெண்களின் கலைத்திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் ஊர் தலைவர், டாக்டர்கள், லாயர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், லயன்ஸ் கிளப் பெண்கள்,ஆசிரியர்கள், அரசியல் துறையைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உள்ள பெண்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.













