திருவாரூர் அருகே அதிமுக ,அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து 100 குடும்பத்தினர் திமுகவில் மாவட்ட செயலாளர் பூண்டி. கலைவாணன் முன்னிலையில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட
உதயமார்த்தாண்டபுரம், தொண்டியக்காடு, வடசங்கேந்தி, இடும்பாவனம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 குடும்பத்தினர் அதிமுக ,அமமுக,பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி முத்துப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன் ஏற்பாட்டின்படி, கொரடாச்சேரியில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கலைவாணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயலாளர் கலைவாணன் கழக வேஷ்டி, புடவை மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி கோவிந்தராஜ் உட்பட கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.















