திருவாரூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை, பித்தளை பானை, அடுப்பு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது..”
இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகையை தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.. இந்த ஆண்டு வருகிற 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
தை முதல் நாள் பொங்கலன்று மக்கள் தங்களுடைய வீடுகளில் புது பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவது வழக்கம்.. பழங்காலத்தில் வீடுகளில் உள்ள அனைத்து பொருட்களுமே மண் பணடங்களாக இருந்நது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி பித்தளை பாத்திரங்கள், எவர்சில்வர், நான்ஸ்டிக் பாத்திரங்கள் அதிக அளவில் மக்கள் பயன்படுத்து வருகின்றனர்..
மேலும் பொங்கல் பண்டிகைக்கும் மண் பாண்டங்களை தவிர்த்து மற்ற பாத்திரங்களில் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.
இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் திருவாரூர் மாவட்டத்தில் கிராம மற்றும் நகர் படங்களில் மண்பாண்டங்களில் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்..
பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில்.. மண் பானை.. மண் அடுப்பு.. மண் சட்டி.. உள்ளிட்ட மண்பாண்டங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.. மேலும் அதற்கு இணையாக பித்தளைப் பானைகள்.. எவர்சில்வர் பாத்திரங்களும் விற்பனை நடைபெற்று வருகிறது
மேலும் திருமணமான பெண்களுக்கு பெற்றோர்கள் பொங்கல் வரிசையாக பித்தளை பானைகளை மற்றும் பாத்திரங்களை வாங்கி செல்கின்றனர்.
திருவாரூர் மாவட்ட பகுதிகளில் மண் பானைகள் மற்றும் பித்தளை பானைகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது..













