கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரத்த நாள அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு 7 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு கால் எடுக்காமலே மீண்டும் நடக்க வைத்து சாதனை
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த 45 வயதான ஓட்டுனர் சாந்தகுமார் இவருடைய இடுப்புக்கு கீழ் உள்ள ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு கால் விரல் அழுகி காலை எடுக்கும் நிலையில் இருந்தார் இந்த நிலையில் நாகர்கோவில் இராமன் புதூர் பகுதியில் உள்ள இரத்த நாள அறுவை சிகிட்சை சிறப்பு மருத்துவர் நோபிள் அவர்களை சென்று பார்த்த போது அவர் அறுவை சிகிட்சை மூலம் சரிபடுத்த முடியும் என கூறிய நிலையில் 7 மணி நேரம் பைபாஸ் அறுவை சிகிட்சை மூலம் கால் எடுக்காமலே அவர் மீண்டும் நடக்கும் வகையில் சிகிட்சை செய்து மருத்துவ சாதனை செய்து உள்ளார்.
இதுகுறித்து டாக்டர் நோபிள் கூறுகையில் ராதாபுரத்தில் இருந்து 3 வாரம் முன்னால் சாந்தகுமார் வந்திருந்தார். அப்போது துண்டு விரல்ல மட்டும் லேசா கருப்பா ஒரு புண்ணு வந்திருந்தது. உடனே செக் பண்ணி பார்க்கும்போது இடுப்புக்கு கீழ இரத்த ஓட்டம் இல்லாததைக் கண்டுபிடிச்சோம்.
கண்டுபிடிச்ச உடனே அதுக்கு பைபாஸ் செய்தால் தான் காலை காப்பாத்த முடியும்ங்கிற கண்டிஷன் இருந்ததுனால அவரை கூப்பிட்டு தெளிவா சொன்னோம். உங்களுக்கு பைபாஸ் பண்ணனும்; பைபாஸ் பண்ணாதான் காலை காப்பாத்த முடியும் என தெரிவித்தோம் ஆனா அந்த நேரம் அவரு அதை பெருசா பொறுப்படுத்தல. பொறுப்படுத்தாம, “மருந்த வச்சு சாப்பிட்டு காப்பாத்த முடியுமா ட்ரை பண்ணி பாப்போம்” அப்படின்னு அவரு போயிட்டாரு.
ஆனா 3 வாரம் கழித்து அவர் பதட்டத்துல வந்தார். பாதத்துல முன்பாதி ஃபுல்லாவே அழுகி இருந்தது. அழுகி இருந்த உடனே அவர் சொன்னாரு, “சரி, என் கால எடுக்கற மாதிரி இருக்கு, எப்படியாவது காப்பாத்தி கொடுங்க”ன்னு சொல்லவும், உடனடியா அவரை உள்ள அட்மிட் பண்ணி பைபாஸ் ஆபரேஷன் பண்ணோம். பைபாஸ் ஆபரேஷன் செய்து அழுகிய பகுதியை மட்டும் அகற்றி காலை எடுக்காமல் இப்போது அவரு கால் நடக்கிற மாதிரி செய்துள்ளோம்.
புண்ணு சின்னதா இருக்கும்போதே இரத்த ஒட்டம் இருக்கிறதா? இல்லையா என்பதை செக் பண்ண வேண்டும்
இரத்த ஓட்டம் இல்லாத புண்ணுகள் ஆறறது ரொம்ப கடினம்; அதை சரியான டைம்ல ஆற வைக்கல அப்படின்னா, காலை எடுக்கற மாதிரி உள்ள கண்டிஷன்ல போய் முடிந்துரும். அது ஒரு முக்கியமான விஷயம்.
இன்னொன்னு, புகை பிடிக்கிறது தான் இதுக்கு முக்கியமான காரணம். புகை பிடிக்கிறவங்க பிளஸ் சுகர் இருக்கிறவங்களுக்கு ரத்த குழாய் அடைப்பு வருவதற்கு வாய்ப்பு அதிகமா இருக்கும்.
எப்படி இதயத்துல ஹார்ட் அட்டாக் வருதோ, அதே மாதிரி கால்களுக்கு போற ரத்த குழாய், கைக்கு போற ரத்த குழாய், வயிறுக்கு போற ரத்த குழாயிலும் அடைப்பு ஏற்படும். அதை சரி பண்ற பேருதான் வாஸ்குலர் சர்ஜன். கால், கை இந்த மாதிரி இடங்கள்ல உங்களுக்கு புண்ணு இருந்தாலும் வலி இருந்தாலும் வாஸ்குலர் சர்ஜன பார்த்து ரத்த குழாய் நன்றாக ஓடுகிறதா இல்லையா என்பதை செக் பண்ண வேண்டும். அதுல செக் பண்ணிட்டு அது நல்லா இருந்ததுனா, அதுக்கு அப்புறம் வேற எந்த டாக்டர் வேணாலும் பார்க்கலாம் என்றும் தற்போது அவரது காளை எடுக்காமல் வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் இனிமேல் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தனது காலால் நடக்க முடியும் என்றும் டாக்டர் தெரிவித்தார்







