செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரெனக் கனமழை – வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி!
:செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரெனக் கனமழை பெய்துள்ளது.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், இன்று திடீரென வானத்தில் மேகமூட்டம் ஏற்பட்டு, பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது.
மழை பெய்த முக்கிய இடங்கள் குறிப்பாக
செங்கல்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்
,மதுராந்தகம், செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து உள்ளது மேய்ச்சலுக்குச் சென்ற கால்நடைகள் அவதிக்குள்ளானது.
மேலும் அதிக அளவில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகச் சிரமத்திற்கு ஆளானார்கள்.













