மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில்,1400 ஆண்டுகளுக்கு முன்பு, திருஞானசம்பந்தர் வழிபாடு செய்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது, 1400 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வழியே சென்ற திருஞானசம்பந்தர், சுவாமியை தரிசனம் செய்துள்ளார். இதற்காக இவருக்கு ஆலயத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களால் சம்பந்தர் ஆலயம் என்று அழைக்கப்படும் இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானதாகும். ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பல்வேறு புண்ணிய நதிகளில் எடுக்கப்பட்ட புனித நீர், கடங்களில் வைக்கப்பட்டு, ஐந்து காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று ஐந்தாம் காலை யாகசாலை பூஜை நிறைவடைந்த நிலையில், மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.














