நாகை அருகே மோகனூரிலுள்ள பழமையான ஆதி கும்பேஸ்வரர், முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பான கும்பாபிஷேகம் :திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள மோகனூரில், பழமை வாய்ந்த மங்களநாயகி உடனுறை ஆதி கும்பேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் கோயில்களில் இன்று மிகுந்த பக்தி உணர்வுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்த விழா கடந்த ஜூன் 29ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வந்தன.
இன்று யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, கடம் புறப்பாடு நடைபெற்றது. நாதஸ்வர இன்னிசை முழங்க, கோயிலை சுற்றி எடுத்துவரப்பட்ட புனித நீர், சிவாச்சாரியார்கள் மூலம் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு, ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து முத்துமாரியம்மன் கோயிலிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து ஆன்மிக மகிழ்ச்சி அடைந்தனர்.














