நல்லாசிரியர் விருது பெற்ற வட சிறுவளூர் தலைமை ஆசிரியருக்கு பாராட்டு விழா.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வட சிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி அவர்களுக்கு தமிழக அரசால் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவித்தது.
இதனைத் தொடர்ந்து வடசிறுவளூர் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு செண்டி மேளங்கள் முழங்க மழை தூவி வரவேற்கப்பட்டுபாராட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் செல்வி புண்ணியகோட்டி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ஆசிரியர் ராஜேஷ் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தார் இதில் பட்டதாரி ஆசிரியர் ரேவதி வரவேற்புரை ஆற்றினார்.இதில் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) அருணா, ஆசிரியர் பயிற்றுநர் கிருபாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் ஒலக்கூர் ஒன்றியத்தில் பணி புரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். நல்லாசிரியை பத்மாவதி கேசவன் அவர்களை கௌரவித்து வாழ்த்துக்கள் கூறினர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் காலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது













