எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம், குத்தாலம் அரசு பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார் :-
தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு நடுநிலைப் பள்ளியில், மாவட்ட ஆட்சியர் திரு ஸ்ரீகாந்த், விரிவுபடுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்தினார். ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும், 524 துவக்க பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட வரும் நிலையில், 21,783 மாணவ மாணவிகள் இந்த திட்டத்தால் பயன்பட்டு வருகின்றனர், விரிவு படுத்தப்பட்ட இந்த திட்டம் மூலம் மேலும் 144 பள்ளிகளைச் சேர்ந்த 7392 மாணவ மாணவிகள் கூடுதலாக பயன் பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் துவக்கி வைத்த நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் பள்ளியில் ஒளிபரப்பப்பட்டது.













