நேபாள பெருவெள்ளத்தில் சிக்கியவர்களில், ஒரே குடும்பத்தைச் சார்ந்த ஆறு பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தினர் வேதனை, தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரிக்கை:-
நேபாள நாட்டில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், கும்பகோணத்திலிருந்து சுற்றுலா ஏஜென்சி மூலம் சென்ற பயணிகள் 57 பேர் வெள்ளத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழு நபர்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவி வட்டார கல்வி அலுவலர் பூங்குழலி ஆகியோர் நேற்று, தங்கள் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு நலமாக இருப்பதாகவும் பாதுகாப்பு படை முகாமில் தங்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர், செல்போன்கள் வேலை செய்யாத காரணத்தாலும் மேற்கொண்டு தகவல் தொடர்பு கிடைக்காத நிலையில் இவர்களைப் பற்றி மேலும் விவரங்கள் தற்பொழுது தெரியவில்லை என்றும், ரத்தினகுமார் மட்டுமின்றி, அவரது உறவினர்கள் கனகசபை, அவரது மனைவி ராதை, நாவுக்கபீர்தாஸ் அவரது மனைவி விஜயா ஆகிய நான்கு பேர், இந்த ஆன்மீக சுற்றுலாவில் சென்றதாகவும், இதனைத் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் நேபாள நாட்டில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும், இவர்களுடன் சென்ற குடும்ப நண்பர் மயிலாடுதுறை சார்ந்த புஷ்பலதா குறித்து எந்த விவரமும் தெரியவில்லை என்றும் ரத்தினகுமார் உறவினர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். குடும்பத்தினரை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பைட் :-
1.ஞானவல்லி உறவினர்
2.சிவசிதம்பரம் – உறவினர்
















