ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி ஆற்றின் புனித துலா கட்டத் தீர்த்த படித்துறையில், ஏராளமானோர் பூணூல் அணிந்து வழிபாடு நடத்தினர்:-
ஆவணி மாதத்தில் பௌர்ணமி திதியும் அவிட்டம் நட்சத்திரமும், ஒன்றாக வரும் நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்த நாளில் உபாகர்மா எனப்படும் பூணூல் அணிவது, வேத கல்வி ஆரம்பிப்பது இந்த நாளில் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதன்படி ஆவணி அவிட்டத்தில் மயிலாடுதுறை காவிரி ஆற்றின் கரையில் புனித துலா கட்டத்தில் ஏராளமானோர் ஆவணி அவிட்டத்தை கடைபிடித்து, வைதீக முறைப்படி பூணூல் அணியும் சடங்கு நடத்தினர். பின்பு காயத்ரி மந்திரத்தை ஓதி, வழிபாடுகள் செய்தனர். வேத பாராயணம் செய்யவும், வேதங்கள் ஓதும் போது ஏற்படும் சொல் குற்றங்கள் பொருள் குற்றங்களை நீக்கும் சடங்காகவும், பூணூல் மாற்றும் வைபவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
பைட் :-
1.மணிகண்டன் சாஸ்திரிகள்
2.நாராயணசாமி சாஸ்திரிகள்
















