2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தனது அரசியல் கட்சியின் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அரசியலுக்கு யார் யார் வருவார்கள் என்ற ஆர்வமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மதுரை கே.கே. நகர் பகுதியில் புதிய தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்போது அவரை பார்க்கவும், செல்ஃபி எடுக்கவும் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர் ஒருவரால் பெண் ஒருவர் தள்ளப்பட்ட சம்பவத்தில், அந்த ரசிகரை அன்பாகவே எச்சரித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நகைக்கடையை தன்னையும், நடிகை ஆண்ட்ரியாவையும் வைத்து திறந்தது ஏன்?” என்ற கேள்வியை உரிமையாளரிடம் கேட்குமாறு நகைச்சுவையாகச் சொன்னார். இதற்கு, “இருவரும் கைராசி கொண்டவர்கள் என்பதால் தான்” என உரிமையாளர் பதிலளித்தார்.
அப்போது அரசியல் தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டதில், “விஜய் அழைத்தாலும் அரசியலுக்கு செல்லும் எண்ணம் இல்லை” என்று தெளிவாக கூறினார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

















