கோடை காலத்தில் வேலூர், கரூர், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 106% அளவுக்கு அதிகமாகும். தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் 110%ஐ விட அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் பருவமழை சராசரியாக 33 செ.மீ. மழை; ஆனால் 36 செ.மீ.க்கு மேல் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.