திருக்கடையூரில் திமுகவினர் சாலை மறியல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு கைது செய்யப்பட்டனர்
தமிழக எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கூறி இன்று காலையில் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பல இடங்களில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் திருக்கடையூரில் திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் தலைமையில் திருக்கடையூர் கடைவீதியில் திமுகவினர் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழக முதல்வர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களை கண்டித்தும் தமிழக அரசின் கைது நடவடிக்கையை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் அதேபோன்று செம்பனார்கோவில் கடைவீதியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஏராளமானோர் பங்கேற்றனர் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

















