கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக், இறங்கி கழிவுகள் மற்றும் குப்பைகள் நேராக ஆற்றில் கலப்பதால் குடிநீர் கிணறுகள் வழியாக பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதியில் வழங்கும் குடிநீர் மாசு அடைந்து நோய் தொற்று பரவும் அவலநிலை ஏற்பட்டுள்ளது ஆகவே இதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்தது
கன்னியாகுமரி மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் குறுக்கே மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி பாலம் அருகே ஒரு புறம் பாகோடு பேரூராட்சி மறு புறம் குழித்துறை நகராட்சி பகுதி ஆகும் இந்த பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் இறைச்சி கடைக்காரர்கள் கொட்டி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் குவியலாக குவிந்து மலை போல் காட்சியளிக்கிறது சில நேரங்களில் பேரூராட்சி நகராட்சி ஊழியர்கள் இந்த குப்பைகளை தீ வைத்து எரித்து விட்டு செல்கின்றனர் இந்த கழிகளில் இருந்து வீசும் துர் நாற்றத்தோடு தீவை வைத்து எரிக்கபடுவதால் ஏற்படும் புகை காரணமாக இந்த பகுதி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது இதனால் பாதசாரிகள்,வாகன ஓட்டிகள் மற்றும் இந்த பகுதி குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர் மேலும் மழை நேரங்களில் இந்த குப்பைகள் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலப்பதால் ஆற்றில் உள்ள குடிநீர் கிணறுகள் மாசு அடைந்து பாகோடு பேரூராட்சி, குழித்துறை நகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் துர் நாற்றம் வீசி பல தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது ஆகவே நகராட்சி மற்றும் பேரூராட்சி மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்து தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபடுவதோடு கழிவுகள் கொட்டுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்













