திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நே ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கூட்டுறவு பதிவாளர்களின் ஊழியர் விரோத போக்குகளை கண்டித்தும், கூட்டுறவு பதிவாளரின் தன்னிச்சையான தவறான அணுகுமுறைகளை கண்டித்தும், கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ராமநாதபுரம் பகுதியில் பணிபுரியும் வேல்முருகன் என்ற ஊழியரின் தற்காலிக பணிநீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், அனைத்து பணிகளுக்கும் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும், அனைத்து நிலைகளிலும் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும், அரசாணை போடப்பட்டு பணி அமர்வு ஆணை வழங்கப்படாத மூன்று துணைப்பதிவாளர்களுக்கு உடனடியாக பணி அமர்வு ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு துறை ஊழியர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் சுபலெட்சுமி, மாவட்ட இணை செயலாளர் ரேவதி, மாவட்ட செயலாளர் ஐயப்பன், வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















