விஜய் வருவதாக பரவிய தகவலால் வேளாங்கண்ணியில் குவிந்த கூட்டம்; பேராலயம் உள்ளே tvk tvk கோஷமிட்ட தொண்டர்களால் பரபரப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித ஆரோக்ய அன்னை பேராலயத்தில் இன்று அதிகாலை பிரார்த்தனையில் விஜய் பங்கேற்பதாக கூறப்பட் நிலையில் அவரைக் காண அவரது ரசிகர்கள் , தொண்டர்கள் அதிக அளவு திரண்டனர்; பாதுகாப்பிற்கு போலிசார் இல்லாத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் பேராலயத்திற்குள் நெரிசல் ஏற்பட்டது. மாஸ் நடைபெறும் இடத்தில் திரண்ட விஜயின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் போனை ஆன் செய்து வீடியோ எடுப்பதற்காக கையை உயர்த்தி காத்திருந்தனர் ஒரு சிலர் அருகில் இருந்த ஜன்னல்களில் நின்று டிவி கே டிவி கே என முழக்கமட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேராலயம் காவலர்கள் சார்பில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால் உடனே பேராலயம் சார்பில் விஜய் பங்கேற்கவில்லை என அறிவிப்பு செய்த நிலையில் ஏமாற்றத்துடன் கூட்டம் கலைந்து சென்றது.















