இன்று காவலர் தினத்தை முன்னிட்டு புழல் காவல் நிலையத்தில் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது
இன்று செப்டம்பர் 6 காவலர் தினமாக அனுசரிக்கப்படுகிறது இந்த தினத்தை முன்னிட்டு தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன அதன் தொடர்ச்சியாக சென்னை கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட புழல் காவல் இணையத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் காவலர் நள்ளிரவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இதில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் இணைந்து கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர் இதில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் என்றும் கூறப்பட்டுள்ளது
இந்தப் போட்டியில் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்
இந்த போட்டியானது பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் விதமாகவும் மற்றும் போதை ஆன்லைன் மோசடிகள் மற்றும் பல்வேறு விதமான சட்ட விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்ததாக புழல் காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது
















